நிவர் புயல் கரையை கடந்தாலும் பலத்த மழை நீடிக்கும்..!
நிவர் புயல் கரையை கடந்து விட்ட நிலையிலும் வேலூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழை பலத்த காற்று நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் பலத்த காற்று காரணமாக வீட்டுக்கூரைகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.
மேலும் சரியாக இணைக்கப்படாத உலோகங்கள் காற்றின் வேகத்தில் கழன்று போகலாம் என்றும் மின்சாரம் மற்றும் தொலைதொடர்பில் பகுதி அளவு சேதம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் காரணமாக பப்பாளி, வாழை மரங்கள் சேதம் அடைய வாய்ப்பிருப்பதாகவும் மரங்களின் கிளைகள் உடைந்து விழ வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






