--- --:--:-- --

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்..!

9

மிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேல் அடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

 

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் நாளையும், நாளை மறுநாளும் லேசானது முதல் மிதமான மழையும் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon