காதலை ஏற்க மறுத்த பெண்ணை துப்பாக்கியால் மிரட்டிய இளைஞனுக்கு தர்ம அடி..!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை துப்பாக்கியால் மிரட்டிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். அபிஷேக் என்பவன் அதே பகுதியை சேர்ந்த பொறியியல் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
தொடர்ந்து தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளுமாறு தொலைபேசி மூலமாகவும் நேரிலும் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாலை கல்லூரி முடிந்து சகோதரருடன் வீடு திரும்பிய பெண்ணை அந்த வழியாக பைக்கில் வந்து வழிமறித்த அபிஷேக் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார். சுதாரித்துக் கொண்ட பெண்ணின் சகோதரரும் அந்த பகுதி மக்களும் இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.






