--- --:--:-- --

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

01

கஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன் தினம் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,220க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,760க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

 

தொடர்ந்து வார தொடக்கமான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,270க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதேபோல் 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,050க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,400க்கும் விற்பனையாகிறது.மேலும் வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.255, ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon