--- --:--:-- --

eKYC அப்டேட் காலக்கெடு நீட்டிப்பு.!

02

மையல் எரிவாயு சிலிண்டருக்கான இ-கேஒய்சி(e-KYC) சரிபார்ப்பு செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் நுகர்வோர் ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் கட்டாயமாக்கியுள்ளன.

 

 

உயிரிழந்தவர்களின் பெயரில் இருக்கும் கேஸ் இணைப்புகள், ஒரே முகவரியில் இருக்கும் போலி மற்றும் கூடுதல் எரிவாயு இணைப்புகளை கண்டறியவும், தகுதியானவர்களுக்கு மானியம் கிடைப்பதை உறுதி செய்யவும் இ-கேஒய்சி சரிபார்ப்பு பணிகளை கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

 

 

வீட்டில் இருந்தபடியே மொபைல் ஆப் மூலமாகவும், கேஸ் ஏஜென்சிக்கு நேரில் சென்றோ இ-கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு நேற்று ஆகஸ்ட் 16ஆம் தேதிதான் கடைசி நாள் என்று கூறிய நிலையில் தற்போது அதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

அதாவது எல்பிஜி சிலிண்டரை வாங்கும் இண்டேன், பாரத் மற்றும் ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் என அனைவருமே ஆதார் கார்டு அடிப்படையிலான முக அங்கீகார இ-கேஒய்சி அப்டேட்டை வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 23ஆம் தேதிக்குள் அப்டேட் செய்யாவிட்டால் இனி உங்களால் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற முடியாத சூழல் உருவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

ஆன்லைனில் இ-கேஒய்சி செய்ய உங்கள் கேஸ் சிலிண்டர் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியம். நீங்கள் சிலிண்டர் வாங்கும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி (IndianOil One, HP Pay மற்றும் Bharat Gas) மற்றும் Aadhaar FaceRD என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

 

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு, ஒடிபி மூலம் உள்நுழைய வேண்டும். ​முகப்புப் பக்கத்தில் உள்ள ‘LPG e-KYC’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் உள்ள நிபந்தனைகளைப் படித்துவிட்டு ஒப்புதல் அளித்து, ​உங்கள் முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டும். முகம் ஸ்கேன் வெற்றிகரமாக முடிந்ததும், e-KYC விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு அடுத்த சில நாட்களில் ஏற்றுக் கொள்ளப்படும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon