தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்..!
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையை ஒட்டிய வங்க கடல் பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாளை ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கன மழையும் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







