--- --:--:-- --

கோவை : அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனோ தடுப்பூசி ஒத்திகை.முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களு தடுப்பூசி போடுவதற்கான திட்டம் !!!

3.4

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தடுப்பூசி வழங்கும் பணிகள் ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து,  நாடு முழுவதும் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஒத்திகை முகாம்கள் இன்று நடைபெறுகிறது.

 

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, கற்பகம் மருத்துவமனை, கிணத்துக்கடவு மற்றும் சமத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

முதற்கட்டமாக கோவை மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது. முகாமினை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் ” அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசிகள் போட முடியும்.முதற்கட்டமாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் தடுப்பூசி போடுவதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும்,
3316 தடுப்பூசிகள் கோவை அரசு மருத்துவமனையை சேர்ந்தவர்களுக்கு செலுத்தப்படவுள்ளது. அதற்கான பதிவும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

மேலும்,தடுப்பூசி போட்ட பிறகு 30 நிமிடம் கண்காணிக்கப்படுவர் எனவும்,வாந்தி,மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பேசினார். மேலும்,மத்திய அரசின் அறிவுரைப்படி தடுப்பூசி போடுபவர்கள் பதிவு செய்து இரண்டு டோஸ் போடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார் “.

Leave a Reply

Right Menu Icon