கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை..!
கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மாநில அரசு எச்சரித்துள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.
கோழிக்கோட்டில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறும் நிலையில் திருவனந்தபுரம் கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அல்லது ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வயநாடு கோழிக்கோடு பகுதிகளில் மீட்பு படைகள் தயார் நிலையில் உள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





