--- --:--:-- --

அழுகிய நிலையில் பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட பெண் சடலம்..!

9

திருச்சி அருகே அழுகிய நிலையில் பெண் சடலத்தை மீட்ட போலீசார் தப்பியோடிய கணவரை தேடி வருகின்றனர். ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நரசிம்மராஜ் தனது மனைவி சிவரஞ்சனி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

 

நரசிம்ம ராஜ் வேலைக்கு செல்லாததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இடையில் தகராறு ஏற்படவே சிவரஞ்சினியை கத்தியால் குத்திக் கொன்ற நரசிம்ம ராஜ் சடலத்தை பிளாஸ்டிக் பையில் கட்டி கட்டிலில் தள்ளி விட்டு தலைமறைவாகிவிட்டார்.

 

கடந்த 4 நாட்களாக செல்போனில் தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தார் சென்று பார்த்ததில் சிவரஞ்சனி கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் குழந்தைகள் இருவரும் ஆந்திராவில் உள்ள சகோதரி வீட்டில் இருப்பதை கண்டறிந்தனர். தலைமறைவாக உள்ள கணவரையும், அவரது தாயாரையும் தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon