தமிழக வெற்றி கழகம் மாநாடு வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள் : இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர்
தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்காக பந்தல்கால் நடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் என இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.






