--- --:--:-- --

வீட்டின் மேற்கூரையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு..!

9

பெரம்பலூர் அருகே வீட்டின் மேற்கூரையில் திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் வீட்டில் இருந்தவர்களும் அந்த பகுதி மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

 

தாரமங்கலம் அருகே உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் அனுமதி பெற்று திருச்சி ரயில்வே போலீசார் பயிற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள பாரதிதாசன் என்பவரது வீட்டின் மேற்கூரையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து ஓட்டை ஏற்பட்டுள்ளது.

 

அதன் காரணமாக வீட்டில் இருந்தவர்களும் அந்த பகுதி மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்து வந்ததாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon