--- --:--:-- --

ஆர்டர் செய்தது சர்க்கரை சோதனை கருவி…பார்சலில் வந்ததோ சாக்லேட் பாக்கெட்டுகள்..!

10

ர்க்கரை அளவு சோதிக்கும் கருவிக்கு பதிலாக காலாவதியான சாக்லேட்டை அமேசான் நிறுவனம் அனுப்பியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா பசுமலை ஊரை சேர்ந்த 74 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியர் இராசையா தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

 

அவரது மனைவிக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதால் வாரத்தில் ஐந்து முறை சர்க்கரை அளவை பரிசோதனை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்காக இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அமேசான் நிறுவனத்தில் இருந்து ரத்தத்தில் சர்க்கரை அளவை காட்டும் கருவியை வெளிநாட்டில் இருக்கும் மகன் ஆர்டர் செய்து கொடுத்துள்ளான்.

 

வழக்கம்போல ஆர்டர் செய்திருந்த நிலையில் காலாவதியான இரண்டு சாக்லேட்டுக்குள் இருந்ததை பார்த்த அந்த முதியவர் செய்வதறியாது திகைத்தார்.

 

Right Menu Icon