--- --:--:-- --

மீண்டும் விஜய்க்கு ‘நோ’ சொன்ன கவர்னர்..!

7

டந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க கட்சி 34.92% வாக்குகள் பெற்று 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் த.வெ.க-விடம் 108 இடங்கள் மட்டுமே உள்ளன. அதிலும் விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் ஒன்றில் ராஜினாமா செய்தால் 107 தொகுதிகள் தான் இருக்கும்.

 

 

இதனால் கூடுதலாக 11 இடங்கள் த.வெ.க-விற்கு தேவைப்படும் நிலையில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி த.வெ.க-விற்கு ஆதரவு அளித்தது. மேலும் 6 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், த.வெ.க கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் வி.சி.க-விற்கு ஆதரவு கோரி கடிதம் அனுப்பியது. த.வெ.க-விற்கு ஆதரவு கொடுப்பது குறித்து மூத்த நிர்வாகிகளுடன் இணைந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என வி.சி.க கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

 

இதனிடையே, த.வெ.க தலைவர் விஜய், புதன்கிழமை ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு நேரில் கடிதம் கொடுத்தார். ஆனால், தனி பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் த.வெ.க தலைவர் விஜய் வியாழக்கிழமை மீண்டும் கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநர் அர்லேகரை சந்தித்தார்.

 

 

தனிப் பெரும் கட்சியாக இருப்பதால் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்றும், மெஜாரிட்டியை சட்டமன்றத்தில் நிரூபிக்கிறோம் என்றும் ஆளுநரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. இருப்பினும், ஆட்சியமைப்பது குறித்து விஜய் அளித்த விளக்கங்களில் ஆளுநருக்கு திருப்தியில்லை எனவும், எனவே தற்போதைக்கு பதவியேற்க அழைப்பு விடுக்க வாய்ப்பில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

மேலும் 112 பேர் ஆதரித்த நிலையில் மேலும் 6 பேர் யார் ஆதரிப்பார்கள் என்று கேள்வி எழுப்பியதோடு, பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா? ஆட்சியமைத்தால் கவிழாது என உறுதியளிக்க முடியுமா? என்று ஆளுநர் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே த.வெ.க தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும் என த.வெ.க தொண்டர்கள் ஆளுநர் மாளிகை வெளியே பதாகைகளை ஏந்தியபடி நின்றிருப்பதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply

Right Menu Icon