--- --:--:-- --

ஆபாச பாடம் நடத்தியதாக அரசு பள்ளி ஆசிரியர் கைது..!

11

ன்னியாகுமரியில் ஆபாச பாடம் நடத்தியதாக அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில் தவறு செய்த மாணவிகளை கண்டித்ததால் பொய் புகார் அளித்துள்ளதாக போலீசார் உரிய விசாரணை நடத்தாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் மாணவ மாணவிகளுக்கு ஆபாச வகுப்பு நடத்த உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

 

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு குமரி மாவட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது. வகுப்பறையில் ஆபாசமாக எழுதியதால் பெற்றோர்களை அழைத்து வருமாறு ஆசிரியர் கூறியுள்ளதாக அவர் மீது பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

புகார் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டதாக அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

 

Right Menu Icon