அரசு அலுவலகம், பள்ளிகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை
வருகிற 14ம் தேதி (திங்கட்கிழமை) தமிழ் புத்தாண்டு ஆகும். இது அரசு விடுமுறை தினமாகும். இதனால் வருகிற 14ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை. அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களும் அடைக்கப்பட்டு இருக்கும்.
அதேபோல், பள்ளி, கல்லூரிகளுக்கும் திங்கட்கிழமை விடுமுறை. தற்போது நடைபெற்றுவரும் பொதுத் தேர்வுகளும் திங்கட்கிழமை நடக்காது.





