இ ரிஜிஸ்டர் முறையை அமல்படுத்தப்பட உள்ளது தமிழக அரசு..!
மலைகளில் இ பாஸ் நடைமுறைக்கு பதில் இ ரிஜிஸ்டர் முறையை அமல்படுத்த இருப்பதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மலைப்பகுதிகள் மாநிலங்களுக்கிடையே இ பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது இந்த தகவலை தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
மலைப்பகுதிகளில் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க கூடிய வசதிகள் இல்லாததால் இ பாஸ் முறை பின்பற்றப் பட்டு வருவதாகவும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
மாநிலங்களுக்கிடையே இ பாஸ் முறையை பின்பற்றுவது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் மூன்று நாட்களுக்குள் தமிழக அரசு விளக்கம் கேட்டு பெற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் உள்துறை அமைச்சகம் தரும் விளக்கத்தை பத்திரிக்கைகள் வாயிலாக விளம்பரப்படுத்தி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.






