--- --:--:-- --

தமிழகத்தில் 4 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ள தமிழக அரசு..!

6

மிழகத்தில் நான்கு காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

திருப்பூர் நகர தலைமையிடத்து துணை ஆணையர் செல்போன் செல்வகுமார் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பரமேஷ் குமார் சென்னை ரயில்வே துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

சென்னை ரயில்வே துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் பூக்கடை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பூக்கடை துணை ஆணையராக இருந்த கார்த்திக் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

ராமநாதபுரம் எஸ்பியாக இருந்த வருண்குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். பொய் வழக்குகள் பதிவு செய்ததாக அவர் மீது எம்எல்ஏ கருணாஸ் முதலமைச்சரிடம் புகார் அளித்திருந்த நிலையில் வருண்குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon