--- --:--:-- --

திருப்பூரில் நடுரோட்டில் அரசு நகர பேருந்து “மக்கர்”! பயணிகள் அவஸ்தை..!!

IMG_20211030_210008 (1)

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பல ஊர் உங்களுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் பேருந்து நிலையத்திலிருந்து கருமத்தம்பட்டி செல்லும் அரசு நகரப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் பார்க்ரோட்டை கடந்து காதர்பேட்டை அருகே வரும்போது, எஞ்சின் ஆஃப் ஆனது. ஓட்டுனர் நீண்ட நேரம் ஸ்டார்ட் செய்தும் ஸ்டார்ட் ஆகவில்லை. பின்னர் பயணிகளை வேறு பேருந்தில் அனுப்பி வைத்தனர்.

 

இதனைத்தொடர்ந்து போக்குவரத்தை சீரமைக்க வந்த போலீசார் ஒருவா் அருகில் இருந்தவர்களை அழைத்து பேருந்தை தள்ளி முயற்சித்தும் பயனில்லை. பரபரப்பான சாலையில் அரசு பேருந்து “ரிப்பேர்” ஆனதை அறிந்த போக்குவரத்து போலீசார், உடனடியாக ரெக்கவரி வேன் வரவழைத்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்த சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Right Menu Icon