--- --:--:-- --

மீண்டும் எகிறியது தங்கம் விலை..!

2

சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. தொடர்ந்து தற்போது மே மாதம் தேர்தல் முடிந்த பிறகு சற்று சரிவை நோக்கி இருந்த தங்கம் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது.

 

அந்த வகையில் நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,050க்கும் சவரனுக்கு ரூ. 1,840 உயர்ந்து ரூ.112,400க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,150க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,810க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.275க்கும், ஒரு கிலோ ரூ.2,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon