--- --:--:-- --

தலைகீழாக குறைந்த தங்கம் விலை..!

1

சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

 

நேற்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,800க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.11,770க்கும் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.94,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.9,815க்கும் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.78,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மட்டும் அதிரடியாக கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.180க்கும் ஒரு கிலோ ரூ.1,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon