--- --:--:-- --

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..!

3

2026ஆம் ஆண்டு தொடங்கியதும், ஜனவரி மாதத்தில் தங்கம் விலை பல முறை அதிகரித்து புதிய புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஏற்ற இறக்கத்தில் இருந்தது. இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்தால் பங்குசந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக மார்ச் 1ஆம் தேதியான நேற்று ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.

 

தொடர்ந்து இன்று ( மார்ச் 2) தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.15,660க்கும் சவரனுக்கு ரூ.920 குறைந்து ஒரு சவரன் ரூ.1,25,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,400க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,07,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.315க்கும் ஒரு கிலோ ரூ, 3,15,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

Right Menu Icon