--- --:--:-- --

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..!

3

பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரித்து அதிரடி காட்டி வருகிறது. பட்ஜெட்டிற்கு பிறகு தங்கம் விலை அதிரடியாக குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

 

கடந்த 2-3 நாட்களாகவே தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,650க்கும், சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ரூ.1,17,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

தொடர்ந்து இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே சற்று ஆறுதலை அளித்துள்ளது. அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,580க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,16,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

ஆனால் 18 காரட் விலை மட்டும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.12,530க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,00,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon