--- --:--:-- --

மீண்டும் எகிறியது தங்கம் விலை..!

1

மே மாதம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.நேற்று மே 28ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

 

அதன் படி, இன்று மே 29ஆம் தேதி , 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,775க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.29 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,550க்கும், சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையும் கிராமுக்கு அதிரடியாக ரூ.1.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.102.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon