வங்கியில் தங்கம் டெபாசிட் திட்டம் நிறுத்தம்!
தங்கத்தை வங்கியில், டெபாசிட் செய்து வட்டி வருமானம் ஈட்டும், தங்க முதலீடு திட்டத்தை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2015இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தபின், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தங்கத்தை முதலீடு செய்திருந்தால், தற்போதைய விதிகளின்படி, அதற்கான காலம் முடியும் வரை பலன்களைப் பெறலாம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.






