--- --:--:-- --

பெண்களுடன் பழகி ஆபாச வீடியோக்கள் வைத்து மிரட்டி பணம் பறிப்பு..!

5

மூகவலைத்தளங்களில் பெண்களுடன் நெருக்கமாக பழகி ஆபாச வீடியோக்கள் எடுத்து வைத்து மிரட்டி பணம் பறித்ததாக கைது செய்யப்பட்ட நாகர்கோவில் காட்சியைப் போலவே ஆந்திராவில் ஒரு நபர் சிக்கியுள்ளார்.

 

கடப்பா பகுதியில் வீடு ஒன்றில் திருடியதாக கைது செய்யப்பட்ட பிரசன்னகுமார் என்ற இளைஞரின் செல்போனை போலீசார் ஆராய்ந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர வயது பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

தீவிர விசாரணையில், சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட பிரசன்னகுமார் கல்லூரி முதலாம் ஆண்டிலேயே படிப்பை நிறுத்தி சமூக வலைதளங்களில் இளம் நடுத்தர வயது பெண்களை குறிவைத்து காதல் வலையில் வீழ்த்தி வந்துள்ளார்.

 

நன்றாக பழகியதும் பெண்களின் நிர்வாண படங்கள் வீடியோக்களை அனுப்ப சொல்லி பணம், நகை கேட்டு மிரட்டியதும் கட்டாய பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon