5ஜி இணைய சேவையை வழங்க உள்ள ஜியோ..!
100% உள்நாட்டு தொழில்நுட்பத்தை கொண்டு உலகத்தரம் வாய்ந்த 5ஜி இணைய சேவையை வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
அக்குழுமத்தின் 43வது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி சேவைக்கான கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளதாகவும் அதற்கான சோதனைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் 5ஜி சேவைக்கான அலைக்கற்றை உரிமம் கிடைத்ததும் இந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.
இந்திய தொலைதொடர்புத் துறையில் நிலவும் நிதிப்பற்றாக்குறை காரணமாக 5ஜி அலைக்கற்றை அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.






