5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு: அச்சப்பட தேவையில்லை
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்களும், பெற்றோர்களும் அஞ்சத்தேவையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் வெற்றி பெறுவார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். ஆண்டுதோறும் நடக்கும் தேர்வுகளை போலத்தான் இந்த தேர்வுகளும் இருக்கும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.






