பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்..!
பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தின உரையில் அவர் பேசுகையில், இப்போதைய சிவில் சட்டம் மத ரீதியாகவும், பாரபட்சமாகவும் இருப்பதாக பெரும்பான்மையின மக்கள் கருதுகின்றனர்.
இதுபற்றி அனைவரும் கருத்து தெரிவிக்க வேண்டும். பெரிய அளவில் விவாதிக்க வேண்டும். பாரபட்சமான சட்டத்தை ரத்து செய்தே ஆக வேண்டும் எனக் கூறினார்.






