தூய்மை பணியாளர்களின் குடியிருப்பு மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!
மதுரையில் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள அவனியாபுரம் பிவி காலணியில் 2க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களுக்காக அரசு சார்பில் அங்கு குடியிருப்பு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் இந்த குடியிருப்புகளில் பெட்ரோல் குண்டு வீசி தாக்க முயன்றுள்ளனர்.
இது குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர். இதனால் விரத்தியடைந்த குடியிருப்பு வாசிகள் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவனியாபுரம் காவல்துறையினரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





