--- --:--:-- --

கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு..!

1

ணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 1899 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்துள்ளது. கடைகளில் பயன்படுத்தப்படும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

 

அந்த வகையில், இன்று நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த புதிய விலையின்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்து 1899 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், 8வது அல்லது 9வது சிலிண்டரை முன்பதிவு செய்யும்போது இந்த சரிபார்ப்பு மிகவும் முக்கியமானது. இந்த கட்டத்தில், எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் வாடிக்கையாளரின் விவரங்களை ஆய்வு செய்கின்றன. அதன்படி, சரிபார்ப்பு செயல்முறை முடிந்த பின்னரே, அந்த இரண்டு சிலிண்டர்களுக்கான மானியத் தொகை வழங்கப்படும்.

 

இருப்பினும், 14 கிலோ எடை கொண்டவீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து 10 ஆவது மாதமாக மாற்றமின்றி 868 ரூபாய் 50 காசுகளாக நீடிக்கிறது.

Right Menu Icon