ராமநாதபுரத்தில் விநாயகர் ஸ்பெஷல் ஆக விநாயகர் வடிவிலான கேக்குகள்..!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் விநாயகர் வடிவிலான கேக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் மற்றும் முந்திரி சர்க்கரை, குளுக்கோஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களால் வர்ணமயமான விநாயகர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஒரு அடி உயரம் கொண்ட இந்த கேக்குகளை விநாயகர் சதுர்த்தி அன்றுபேக்கிரியில் வைத்து வழிபட்ட பின்னர் அவற்றை கேக்கின் மேல் வைக்கப்படும் அலங்காரங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.







