முதலையை விழுங்க முயன்ற அனகோண்டா பாம்பு..!
பிரேசில் நாட்டில் முதலையை அனகோண்டா பாம்பு விழுங்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மானோஸ் அருகே ஏழாம் தேதி இந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது.
அதில் முதலையை சுற்றி வளைத்து மிக பெரிய அனகோண்டா இருக்கும் காட்சியும் அவை இரண்டையும் அங்கிருந்தோர் தொலைவிலிருந்து கயிற்றை வீசிப் பிடித்து இழுத்து பிடிக்க முயன்ற காட்சியும் உள்ளன.
அப்பகுதி மக்களின் தீவிர முயற்சியால் முதலையை விட்டு விட்டு அனகோண்டா வனப்பகுதிக்குள் சென்றதாகவும் அதனைத் தொடர்ந்து முதலையும் வனப்பகுதிக்குள் சென்று விட்டதாகவும் வீடியோ பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.







