--- --:--:-- --

மணமக்களுக்கு பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரை பரிசாக அளித்த நண்பர்கள்..!

9

சென்னை மதுரவாயலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமக்களுக்கு சின்னவெங்காயம், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரை நண்பர்கள் பரிசாக அளித்து விருந்தினர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

 

சின்ன வெங்காயம், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து இருப்பதை சுட்டிக்காட்டும் விதமாக இவ்வாறு செய்ததாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

 

அப்போதுதான் புதுமண தம்பதி சிக்கனமாக இருப்பார்கள் என அவர்கள் கூறிய காரணத்தால் திருமண மண்டபமே சிரிப்பலையில் ஆழ்ந்தது.

Leave a Reply

Right Menu Icon