--- --:--:-- --

இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஷூ, சாக்ஸ்!

14

வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஷூ மற்றும் ஷாக்ஸ் இலவசமாக வழங்க பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

 

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவர்களுக்கு விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இனி காலணிகளுக்கு பதிலாக ஷூ, சாக்ஸ் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

 

தற்போது அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்த 66 கோடி ரூபாய் செலவாகும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon