--- --:--:-- --

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் போடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இலவச முக கவசம் வழங்கப்பட்டது !!!

20

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும்,இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும்,46 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் மூலம் சமூக பரவலை தடுக்கும் பொருட்டு இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மூன்றாவது நாளான இன்றும் பொதுமக்கள் ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.முக்கியமாக கிராமம்,நகர மற்றும் மாநகர பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கிருமி நாசினி தெளிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

மேலும்,தனியார் தொண்டு நிறுவனங்கள்,அமைப்புகள் சார்பாகவும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.அதன் ஒருபகுதியாக நாம் தமிழர் கட்சியின் தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியின் செயலாளர் பிரேம் சந்தர் தலைமையிலான கட்சியினர் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளித்தனர்.

மேலும்,காவல் நிலையம்,தீயணைப்பு நிலைய அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இலவச முக கவசங்களையும் வழங்கினர்.

 

இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் போடி நகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon