--- --:--:-- --

“காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டும் தான்!!” பெட்ரோல் பங்க், மளிகை, காய்கறி கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு!!

images

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகளுக்கு நேரக் கட்டுப்பாட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

 

இதன்படி மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் , பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் 2.30 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

உணவகங்களில் காலை 7 மணி முதல் 9.30 மணி வரை சிற்றுண்டியும், மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை மதிய உணவுகளும் பார்சலாக மட்டும் வழங்கலாம் எனவும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே உணவுகளை வழங்க ஸ்விக்கி, ஷொமேட்டோ நிறுவனங்களுக்கு அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மருந்தகங்கள் நாள் முழுவதும் செயல்பட அனுமதிக்கப்படும். கோயம்பேடு காய்கறி மற்றும் பழச்சந்தை மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள மொத்த மார்க்கெட்களில் மாலை 6 மணி முதல் காலை 6 மணிக்குள் சிறு வியாபாரிகளுக்கு மட்டும் விற்பனை செய்யலாம் எனவும் இந்த நடைமுறை நாளை மறுதினம் முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon