பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடி..!
பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரியை சேர்ந்த ரமணன் என்பவர் தொழில் தொடங்குவதற்காக இணையத்தில் விண்ணப்பித்த நிலையில் அவரை ஒரு கும்பல் தொடர்பு கொண்டுள்ளது.
இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் 2 கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என அவர்கள் கூறவே ரமணன் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பிறகுதான் அவர்கள் ஏமாற்றியது தெரிய வரவே இதுகுறித்து அந்தப் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினரிடம் கூறியுள்ளார்.
அந்த கும்பல் திட்டமிட்டு வரவழைத்து அவர்கள் இரண்டு பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.







