--- --:--:-- --

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முன்னாள் எம்‌எல்‌ஏ..!

13

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் நேற்று திமுக விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனை போலீசார் தேடி வருகின்றனர்.

 

நாகர்கோவிலை அடுத்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த நான்கு நாட்களுக்கு முன் காதலனுடன் சென்ற நிலையில் சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் சிறுமியை தேடி மீட்ட போலீசார் கைது செய்தனர்.

 

இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தனது தாயுடன் தவறான உறவில் இருந்ததாகவும் 2017இல் நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட சிலர் தன்னையும் பாலியல் வன்கொடுமை செய்த தாகவும் சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

இதையடுத்து முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் உட்பட 4 பேர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon