தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 6972 பேருக்கு பாதிப்பு… 88 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 88 பேர் உயிரிழந்துள்ளனர்.சென்னைக்கு அடுத்தபடியாக விருதுநகரில் அதிகபட்சமாக 577 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில் இன்று 6972 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,27,688 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1,107பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் 96,438பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக விருதுநகரில் 577, திருவள்ளூர 486, நெல்லை 3 85, தூத்துக்குடி 380, மதுரை 3 4 5, செங்கல்பட்டு 365, கோவை 273, தேனி 282, திருவாரூர் 266 என மாவட்டங்களில் அதிக பாதிப்பு உறுதி செய்யப் Uட்டுள்ளது
இதில் இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 4,707ஆகும். இதனால் இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 1,66,956ஆக உயர்ந்துள்ளது .இன்று மட்டும் ஒரே நாளில் 88 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 3659 என உயர்ந்துள்ளது என தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது.






