--- --:--:-- --

மகாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சரான தேஷ்முக் கைது..!

5

காராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சரான தேஷ்முக்கை பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனில் தேஷ்முக் மகாராஷ்டிர உள்துறை அமைச்சராக இருந்தபோது அங்கு உள்ள பார் உரிமையாளர்களிடம் இருந்து 100 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றதாக மும்பை நகரம் முன்னாள் காவல் ஆணையர் குற்றம்சாட்டியிருந்தார்.

 

இதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை. அவர் தொடர்ந்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்ட நிலையில் அனில்தேஷ்முக் நேற்று காலை சுமார் 11.40 மணி அளவில் மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

 

பல மணி நேரம் அவரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. நடைபெற்று முடிந்த விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டார்.

Right Menu Icon