முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவு தினம்..!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகின்றனர்.
உறுதிமொழி எடுத்துக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. வழக்கமாக ஜெயலலிதா நினைவு நாளில் அதிமுகவினர் அண்ணாசாலையில் இருந்து அமைதி பேரணியாக புறப்பட்டு அவரது நினைவிடத்திற்கு செல்வர். இந்த முறை கொரொனா கட்டுப்பாடுகளால் பேரணி செல்லவில்லை என தெரிகிறது.
மாலை 6 மணிக்கு ஜெயலலிதா உருவப்படத்திற்கு விளக்கேற்றி அவரது கனவுகளையும் லட்சியங்களையும் சாத்தியமாகி விட சபதம் எடுப்போம் என அதிமுகவினரை அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை அமைப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளனர்.






