--- --:--:-- --

கோவையில் மருத்துவப்படிப்பிற்கான உள் ஒதுக்கீட்டில் தேர்வான 15 மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தை அரசே முழுவதுமாக ஏற்றுக்கொண்டுள்ளது – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி !!!

6.1

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் மதுக்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் 5 தடுப்பணைகள் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.கோவையில் மருத்துவப்படிப்பிற்கான உள் ஒதுக்கீட்டில் தேர்வான 15 மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தை அரசே முழுவதுமாக ஏற்றுக் கொண்டுள்ளது.அதனை மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

அதனை தொடர்ந து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி ஐஏஎஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், சட்டத்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முதலமைச்சர்அரசு பள்ளி மாணவர்களுக்காக மருத்துவ படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளார்.

கிராமத்தில் பிறந்த விவசாயி நாட்டை ஆள முடியும் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.நிவர் புயலின்போது செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்த நிலையில் மக்களை காப்பதற்காக நேரடியாக செம்பரம்பாக்கம் அணைக்குச் சென்று முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

 

கோவை மாவட்டத்தில் அரசு உள் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர 21 பேர் செய்ய தேர்வு செய்யப்பட்ட நிலையில் 15 பேருக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. மீதமுள்ள 6 பேர் காத்திருப்பில் உள்ளனர்.கோவையில் மருத்துவப்படிப்பிற்கான உள் ஒதுக்கீட்டில் தேர்வான 15 மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தை அரசே முழுவதுமாக ஏற்றுக் கொண்டுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி உள்ளிட்ட அதிகாரிகள் உட்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon