--- --:--:-- --

ஹெட் மாஸ்டர் அடித்ததால் கால் அறுவை சிகிச்சை..! நடக்க முடியாமல் தவிக்கும் சிறுவன்

Concentrated,Professional,Surgical,Doctor,Team,Operating,Surgery,A,Patient,In

துரையில் தலைமை ஆசிரியர் அடித்ததால் காலில் அறுவை சிகிச்சை செய்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் வீட்டிலேயே முடங்கி கிடப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு அளித்தனர்.

 

தாடையம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்த நாகராஜ் என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவனை கடந்த ஆகஸ்ட் மாதம் தலைமை ஆசிரியர் பிரபு அடித்ததில் காலில் வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மாணவனின் கால் பகுதிக்குள் சீல் வைத்ததால் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

 

அதன் பிறகு மாணவர் நடக்க முடியாமல் வீட்டிற்குள் முடங்கி இருப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தவர்கள் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து கைது செய்ய வலியுறுத்தினர்.

 

Right Menu Icon