தொண்டையில் சிக்கிய உணவு.. விநாடியில் திணறிய காவலர்..!
மேட்டுப்பாளையத்தில் காவலர் ஒருவருக்கு உணவு உண்ணும் பொழுது தொண்டையில் உணவுக்குழாய் அடைந்து உயிருக்கு போராடினார். காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் துரிதமாக செயல்பட்ட காவலர் உயிரை காப்பாற்றினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டரங்கில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மதிய நேரத்தில் காவலர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. காவலர் ஒருவர் சாப்பிடும் பொழுது அவரின் தொண்டையில் உணவு சிக்கிக் கொண்டது.
மூச்சு விட முடியாமல் திணறி உள்ளார். என்ன செய்வதென தெரியாமல் உயிருக்கு போராடிய நிலையில் மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் தாமோதரனிடம் ஓடிச்சென்று காப்பாற்றும்படி சைகை செய்துள்ளார்.
உடனடியாக சுதாரித்து உதவி ஆய்வாளர் தாமோதரன் போலீஸ்காரரின் தோளோடு சேர்த்து தூக்கினார். இதனால் அவரின் தொண்டையில் சிக்கியுள்ள உணவு பொருள் வயிற்றுக்குள் சென்று விட்டது. இந்த காட்சிகள் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.






