--- --:--:-- --

விமானத்தினுள் சிறகடித்து பறந்த புறாக்களால் பரபரப்பு

9

அகமதாபாத் விமான நிலையத்தில் பயணிகளுடன் புறப்பட தயாரான கோ ஆப் நிறுவன விமானத்துக்குள் இரண்டு புறாக்கள் பறந்து சென்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து கோ ஆப் நிறுவன விமானம் மாலை 5 மணிக்கு புறப்பட தயாரானது.

 

அப்போது விமானத்தில் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு இரண்டு புறாக்கள் பறந்து சென்றன. அதனை பார்த்து சில பயணிகள் அதிர்ச்சி அடைந்தாலும் சிரித்ததோடு வீடியோவும் எடுத்தனர். ஒரு பயணி பறந்த புறாக்களை பிடிக்க முயன்றார்.

 

இதையடுத்து புறாக்கள் வெளியேற்றப்பட்டு 30 நிமிட தாமதத்திற்குப் பின்னர் விமானம் புறப்பட்டது. இதற்காக கோ ஆப் நிறுவனம் பயணிகளிடம் வருத்தமும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon