--- --:--:-- --

சென்னையில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடுகள் விதிப்பு

download (6)

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை ஒட்டி மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் இடையேயான சந்திப்பை ஒட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்திப்பு நடைபெறும் நாளில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் இடையேயான வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக வரும் 11ஆம் தேதி சீன அதிபர் ஜீ ஜின்பிங் தனி விமானத்தில் சென்னை வருகிறார். இதையொட்டி நாளிலும் அவர் புறப்பட்டு செல்லும் நாளில் சென்னையில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

 

அதாவது சிசிபங் சென்னை விமான நிலையத்தில் இருக்கும் நேரம் வரை வேறு எந்த விமானமும் அங்கிருந்து புறப்பட தரையிறங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்பை ஒட்டி மாமல்லபுரத்தில் சென்னை நகரிலும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட உள்ளன.

Leave a Reply

Right Menu Icon