100 வயதானாலும் வருமான வரி செலுத்தும் 3 பெண்மணி..!
160 ஆவது வருமானவரி தினத்தையொட்டி 100 வயதுக்கு மேற்பட்ட வருமான வரி செலுத்தும் மூன்று பெண்களை வருமான வரித்துறை கவுரவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பீனான் நகரைச் சேர்ந்த 117 வயதான கிரிஜா இவர்களில் மூத்தவர் என்று தெரிவித்துள்ள மத்திய பிரதேச வருமான வரித்துறை அதிகாரிகள் ஓய்வு ஊதியம் மற்றும் வட்டியில் இருந்து கிடைக்கும் வருவாயை இவர் வருமான வரி தாக்கலை வெளியிட்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்தூரை சேர்ந்த 103 வயதான ஈஸ்வரி பாய், பிலாஸ்பூரை சேர்ந்த 100 வயது வரை பினா ரக்ஷித் இந்த ஊரை சேர்ந்த 100 வயது காஞ்சனா பாய் ஆகியோர் இதர பெண்மணிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







