மீனவர் பிரச்னை: திமுக நோட்டீஸ்
மீனவர் பிரச்னை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் அளித்துள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதாகவும், இவ்விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்னறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.





