கல்லூரி விடுதியில் முதலாமாண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை..!
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தனியார் கல்லூரி விடுதியில் முதலாமாண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை மற்றும் 3 மாணவிகள் மயக்கம் போன்ற சம்பவங்கள் சக மாணவிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேவியாக்குறிச்சியில் இயங்கி வரும் பாதிரியார் மகளிர் கல்லூரியில் ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மாணவர்களின் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல் தளத்தில் முதலாமாண்டு மாணவி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
அதை பார்த்த மற்ற இரண்டு மாணவிகள் மயக்கம் அடைந்தனர். இதனையடுத்து அங்கிருந்த பிற மாணவிகள் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறிது நேரத்தில் அதே வளாகத்தில் இரண்டாவது தளத்தில் முதலாம் ஆண்டு மாணவி சோபியா என்பவர் திடீரென தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அந்த மாணவியின் கல்லூரி வளாகத்தில் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.






