--- --:--:-- --

பட்டாசு வெடித்து குழந்தை உட்பட 3 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலி..!

3

புதுச்சேரி கோட்டக்குப்பம் அருகே இருசக்கர வாகனத்தில் பட்டாசு எடுத்துச் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்து குழந்தை உட்பட 3 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

3 பேர் அரியாங்குப்பம் பகுதியிலிருந்து 5 கிலோ, 10 கிலோ மதிப்பிலான நாட்டு பட்டாசுகளை வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் இரு சக்கர வாகனத்தில் கோட்டகுப்பம் பகுதிக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்த போது வாகனத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

 

சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Right Menu Icon